இளம்பெண்களுக்கு சவால் விடும் மீனா... 47 வயதில் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்
நடிகை மீனா 47 வயதில் இளம் பெண்களுக்கு சவால்விடும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.
நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.
கணவரின் இறப்பிற்கு பின்பு வெளியே வராமல் சில மாதங்கள் இருந்த மீனா தற்போது இயல்பு நிலைக்கு வந்துள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகின்றார்.
தற்போது திரைப்படங்கள் மற்றும் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக மீனா கலந்து கொண்டுள்ள இவர் சுடிதார் அணிந்து இளம்பெண்களுக்கு சவால்விடும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |