44 வயதிலும் குறையாத இளமை... மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சினேகா!
44 வயதிலும் தனது இளமைப் பொலிவை சற்றும் இழக்காமல் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை சினேகா, தற்போது மஞ்சள் நிற ட்ரெண்டிங் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் ‘என்னவளே’ திரைப்படம் மூலம் அறிமுகமான சினேகா, விஜய்யுடன் இணைந்து நடித்த ‘வசீகரா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து சினேகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அவர் நடித்த பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சினேகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.சினேகாவின் நடிப்புக்கு மட்டுமல்ல… அவரது அழகான புன்னகைக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
நடிகர் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தில் இணைந்து நடித்த சினேகாவுக்கு, அவருடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இருவரின் காதலும் பின்னர் திருமணத்தில் முடிந்தது. இன்று திரையுலகில் ரசிகர்களால் ரசிக்கப்படும் நட்சத்திரத் தம்பதிகளில் ஒருவராக சினேகா–பிரசன்னா ஜோடி வலம் வருகிறது.இந்த தம்பதியினருக்கு விஹான் (Vihaan) என்ற மகனும், ஆத்யந்தா (Aadhyantaa) என்ற மகளும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவை விட்டு விலகாமல், தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து சினேகா நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், 44 வயதிலும் குறையாத அழகுடனும் இளமைப் பொலிவுடனும் சினேகா வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |