34 வயதில் பேரபிள்ளையை கையில் ஏந்திய பெண்.. மகனுக்கு எத்தணை வயது தெரியுமா?
34 வயதில் தன்னுடைய மகனின் குழந்தையை பார்த்த பெண்ணொருவர் போட்ட பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எமது வீடுகளில் முதல் முதலில் பெற்றோர்களாகும் தம்பதிகளை பார்ப்பது அழகு என்றால் முதல் முதலில் தன்னுடைய மகன் அல்லது மகளின் வாரிசை பார்க்கும் தாத்தா- பாட்டியும் ஒரு விதமான அழகு தான்.
சமீபத்தில் நீதா அம்பானி அவரின் பேரக்குழந்தைகளுடன் ஒரு நிகழ்வில் விளையாடும் காணொளியொன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை பார்த்த இணையவாசிகள்,“ அழகான பாட்டி.. அவள் ஒரு அன்பானவள்..” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
34 வயதில் பாட்டியாகிய பெண்
அந்த வகையில், சிங்கபூரை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தன்னுடைய 17 வயது மகனுக்கு பிறந்த குழந்தை பிறந்திருப்பதாகவும், பாட்டியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “ Popular influencer shirli ling தன்னுடைய 17 வயதில் தாயான காரணத்தினால் அவருடைய மருமகள் மற்றும் மகனுக்கு ஆதரவாக இருக்கிறேன்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை கடந்த அன்னையர் தினத்தன்று வாழ்த்து செய்தியுடன் குழந்தை பிறந்திருப்பதை அறிவித்துள்ளார். மேலும், இளம்வயதில் பாட்டியாக இருப்பதால் விளைவுகள் இருக்கிறது என்றும் அதனால் என்னுடைய மகனை குடும்பத்தை பொறுப்புடன் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளேன்.

இளம் வயதில் இப்படியொரு பாக்கியம் என பெறுமைப்படும் வகையில் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில் ஷிர்லி லிங் 17 வயதில் திருமணம் செய்து அந்தஉறவில் மகிழ்ச்சியாக இல்லை என அடுத்தடுத்து 3 முறை மறுமணம் செய்திருக்கிறார். தற்போது அவருக்கு 5 குழந்தைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |