மரணமடைந்த உரிமையாளர்! 3 மாதங்களாக மருத்துவமனையில் காத்திருக்கும் நாய்
Manchu
Report this article
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல், அவரது வளர்ப்பு நாய் மூன்று மாதமாக மருத்துவமனை வெளியே காத்திருப்பது கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த உரிமையாளர்
சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நோயாளி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் வளர்த்து வந்த நாயும், நோயாளியுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலாளி இறந்துவிடவே, அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவமக்கு சிகிச்சைக்கு சென்றவர் திரும்பி வருவார் என்று நினைத்த வளர்ப்பு நாய் எங்கும் செல்லாமல் அவசர சிகிச்சை பிரிவின் வாசலிலேயே மருத்துவமனையில் காத்துள்ளது.
குறித்த நாய்க்கு அங்கிருக்கும் ஊழியர்கள் சிலர் சாப்பாடு வாங்கி போட்டு வருகின்றனர். இறந்தவரின் உறவினர்களும் நாயை அழைத்துச் செல்ல இதுவரை வரவில்லை.
இதனால் நாள்தோறும் அவசர சிகிச்சைப் பிரிவு முன்பாக அமர்ந்து, தன்னை வளர்த்தவர் எப்போது வருவார் என்று மருத்துவமனை வாயிலை பார்த்துக்கொண்டே இருப்பது பார்ப்பவர்களை வேதனை அடைய வைத்துள்ளது.