கட்டு கட்டாக போனஸ் கொடுத்த சீன நிறுவனம் - எவ்வளவு தெரியுமா?
சீன நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு கட்டுகட்டாக போனஸ் கொடுத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
கட்டு கட்டாக போனஸ்
சீனாவின் ஹென்னான் மாகாணத்தைச் சேர்ந்த ஹென்னான் மைனிங் என்ற நிறுவனம் வழக்கமாக நடத்தும் ஆடம்பர புத்தாண்டு விழாக்களை எல்லாம் நிறுத்திவிட்டு அந்த செலவுத் தொகையை நேரடியாக ஊழியர்களுக்கே வழங்கி உள்ளது.
இதனால், மேடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சீன யுவான் நோட்டுகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன அதை ஊழியர்கள் தூக்க முடியாமல் தூக்கி சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

கொடுக்கபட்ட அந்த தொகை ஒவ்வொரு ஊழியருக்கும் சுமார் 1 லட்சம் யுவான் இது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் ஆகும்.
பல ஊழியர்கள் அந்தப் பணத்தை இரு கைகளாலும் அணைத்தபடி மகிழ்ச்சியுடன் மேடையை விட்டு இறங்கி செல்கின்றனர்.
இந்த விழாவில் பணம எண்ணும் ஒரு போட்டியும் நடைபெற்றது.

இதில் ஒரு ஊழியர் 15 நிமிடங்களில் 12 லட்சம் ரூபாயை துல்லியமாக எண்ணி, கூடுதல் போனஸையும் பெற்றார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
In China, annual bonuses are being handed out — and they’re so big people can barely carry them 💸
— NEXTA (@nexta_tv) February 14, 2026
With the Lunar New Year approaching, it’s peak season for corporate parties and year-end payouts. Companies are wrapping up the year and generously rewarding employees.
Some firms… pic.twitter.com/dT5MDTnBUs
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |