தன் தாத்தாவை விட 10 வருடங்கள் முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண்!
தன் தாத்தாவை விட சுமார் 10 வருடங்கள் முதியவரை திருமணம் செய்த இளம் பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதியவருடன் ஏற்பட்ட எதிர்பாராத நட்பு
அமெரிக்காவை மிஸிஸிப்பியின் ஸ்டார்க்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண் மிராக்கிள் போக். கடந்த 2019 ஆம் ஆண்டு துணிகள் சலவைச் செய்யும் கடையொன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
அப்போது அந்த கடைக்கு வாடிக்கையாளராக வந்த 85 வயது முதியவர் சார்லஸ் போக் என்பவருடன் மிராக்கிள் போக்க்கு நட்பு உருவாகியுள்ளது.
நட்பை காதலாக மாற்றிய முதியவர்
காலங்கள் செல்ல செல்ல இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இவரின் காதலை வெளியிலுள்ளவர்களுக்கு சொல்லாமல் இருந்துள்ளார்கள்.
இவரின் வயதை கணித்து பார்த்ததில் மிராக்கிள் போக்கின் தாத்தாவை விட 10 வயது முதியவர் தான் தன்னுடைய காதலன் என்று தெரியவந்துள்ளது.
இருந்தாலும் மிராக்கிள் போக் இது எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் 2020ஆம் ஆண்டு சார்லஸ் தனது காதலை மிராக்கிளிடம் தெரிவித்தவுடன் காதலை ஏற்றுக் கொண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்கள்.
இவர்களின் திருமணத்தை பார்க்கும் போது காதலுக்கு மனம் மட்டும் தான் முக்கியம், தோற்றம் முக்கியமில்லையென தெரியவருகிறது. இவர்கள் இருவரும் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன், இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் தான் இறக்கும் வயதில் இது போன்ற திருமணம் தாத்தாவிற்கு தேவையா? எனவும் வாழ்த்துக்களையும் கருத்துக்களாக பதிவிட்டு வருகிறார்கள்.