2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்!
2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று 17 ஆம் திகதி நிகழ்கின்றது. இன்று பிற்பகல் 3.26 மணிக்கு சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 7.57 மணிக்கு சூரிய கிரகணம் முடிவடையும்.
ஜோதிட கண்ணோட்டத்தில் கிரகண நிகழ்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மறுபுறம், அறிவியல் பார்வையில், கிரகண நிகழ்வு ஒரு வானியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இன்று சூரிய கிரகணத்தின் போது, சுக்கிரன், ராகு, புதன் ஆகிய கிரகங்கள் கும்பத்தில் இருக்கும் போது, 4 சிறப்பு வாய்ந்த யோகங்கள் உருவாக போகின்றது.
அதாவது, சூரியன் புதன் சேர்க்கையில் புதாத்திய யோகம், செவ்வாய் சந்திரன் சேர்க்கையில் மகா லட்சுமி ராஜயோகம், லட்சுமி நாராயண யோகம், சுக்ராதித்ய யோகம் ஆகியவை உருவாகிறது.

இதன் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு பேரதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.
அப்படி இந்த சூரிய கிரகத்தால் உருவாகும் முக்கிய 4 ராஜ யோகத்தால் சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பாதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இன்று சூரிய கிரகணத்தால் உருவாகும் ராஜயோகங்களால் வாழ்வில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் உண்டாகும். இவர்களுக்கு தொழில் வளர்ச்சி இதன் பின்னர் அபரிமிதமாக இருக்கும்.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வந்தவர்களுக்கு அதற்காக வாய்புகள் கைக்குமேல் வந்துசேரும். நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகப்போகின்றது.
குடும்பத்திலும் சரி திருமண பந்தத்திலும் சரி இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி காதல் அதிகரிக்கும். குறிப்பாக பொருளாதாரத்தில் உச்சகட்ட பலனை அனுபவிப்பீர்கள்.
மிதுனம்

மிதுன ராசியினர் குறித்த 4 ராஜயோகங்களால் பல நன்மைகளை பெறுவார்கள்.இவர்கள் வாழ்வில் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட விடயங்கள் மிகவும் எளிமையாக நிறைவேறும்.
பணப்புலக்கம் எதிர்ப்பார்ப்பை விட அதிகமான இருக்கும். பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும் யோகம் உருவாகும். மனநிலையில் புத்துணர்வு உண்டாகும். எதையும் சாதித்துவிடலாம் என்ற மனநிலையில் இருப்பீர்கள்.
சூரியன் ஆசியால் தலைமை பதவியில் அமரும் யோகம் உண்டு. புதிய வீடு அல்லது வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்

சூரியனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த சிம்ம ராசிக்காரர்களுக்கு குறித்த ராஜ யோகங்களால் வாழ்க்கையே மாறப்போகின்றது. எதிர்பாராத வகையில் பல சாதக பலன்களை அனுபவிப்பீர்கள்.
நிதி நிலையில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு பாரிய வளர்ச்சி உண்டாகும். எதிர்பாராத வகையில் முன்னைய முதலீடுகளில் இருந்து அதிக லாபம் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். சுப நிகழ்வுகளை ஒற்றுமையாக நடத்தி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் கூடிவரும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு குறித்த 4 அரிய ராஜயோகங்களால், பல்வேறு வகையிலும் நேர்மறையான தாக்கம் இருக்கும். குறிப்பாக பணவரவுக்கு பஞ்சமே இருக்காது.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி புத்துணர்வு உண்டாகும்.
தொட்டதெல்லாம் பொன்னாகும் பேரதிர்ஷ்டத்தை இந்த ராசியினர் அனுபவிக்கப்போகின்றார்கள். தொழில் ரீதியில் அசுர வளர்சி ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |