2026ல் அதிக பண பிரச்சனையை சந்திக்கும் ராசியினர் யார் யார்? உஷாரா இருக்கனுமாம்
புத்தாண்டில் நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நிதி சிக்கலில் ராசிகள்
இன்னும் சில தினங்களில் பிறக்க இருக்கும் புத்தாண்டில் ஜோதிட ரீதியாக பல ராசியினருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசியினர் சில சிக்கல்களையும் சந்திப்பார்கள்.
ஏனெனில் சில ராசியினருக்கு நேர்மறை ஆற்றல் காணப்படும் போது அனைத்து விடயங்களும் நல்லதாகவே இருக்கும். ஆனால் சில ராசியினருக்கு எதிர்மறை ஆற்றல் காணப்படவும் செய்கின்றது.
அந்த வகையில் புதிதாக பிறக்கும் ஆண்டில் நிதி சிக்கலை சந்திக்கும் மற்றும் கடன் சுமையில் சிக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு புத்தாண்டில் பண பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 2026ம் ஆண்டில் கவனமாக இருப்பதுடன், கடன் வாங்குவதைத் தவிர்க்கவும் செய்ய வேண்டும். மேலும் பங்கு சந்தை, தொழிலில் முதலீடு இவற்றினையும் கவனமாக செய்ய வேண்டும்.
பணம் கொடுத்து வாங்குவதில் சிக்கல் ஏற்படுவதுடன், உறவுகளும் விலகி செல்லும். உறவினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குருவின் வக்ர பெயர்ச்சி நிதி சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

மிதுனம்
மிதுன ராசியினர் புத்தாண்டில் பண விடயத்தில் கவனமாக இருக்கவும். குரு வக்ர பெயர்ச்சியில் நிதி விடயத்தில் ஏற்ற இறக்கத்தை காண்பீர்கள். அதாவது புத்தாண்டின் முதல் பாதியில் உங்களுக்கு அனைத்து விடயங்கள் சாதகமாக காணப்படும்.
ஆனால் பிற்பாதியில் சனி வக்ர பெயர்ச்சியினால் வருமானத்தில் சரிவுகள், தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். ஆகையால் 2026ம் ஆண்டு நிதி விடயத்தில் உஷாராக இருக்க வேண்டும்.

சிம்மம்
2026ம் ஆண்டில் சிம்ம ராசியினருக்கு முதல் பாதியில் கஷ்டமும் இரண்டாம் பாதியில் சாதகமாகவும் அமையலாம். குரு வக்ர பெயர்ச்சியினால் செலவு அதிகரிக்கும்.
அதாவது நீங்கள் செய்யும் செலவுகள் கடனில் சிக்கவைக்கும். ஆகையால் புத்தாண்டில் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்கவும். அவ்வாறு வாங்கினாலும் அதனை திருப்பி அடைக்க முடியாமல் பல சிக்கல்களும் ஏற்படும்.
சொத்துக்களை விற்று சமாளிக்கும் நிலையும் ஏற்படலாம். ஏனெனில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்துவதுடன், நிதி சார்ந்த விடயத்தில் சிக்கல் வரும் என்பதால் கவனமாக செயல்படவும்.

கன்னி
கன்னி ராசியினர் பிறக்கும் 2026ம் ஆண்டில் நிதி சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆனால் குடும்பத்திலிருந்த கடன் பிரச்சனையும் தீர்வதுடன், நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். 2026 வருடத்தில் கடைசியில் நிதி நிலைமை மேம்படுவதுடன், சொந்த தொழில் தொடங்க வாய்ப்பும் உள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |