சிக்கன் ப்ரை வத்தல் கிள்ளி போட்டு இப்படி செய்து பாருங்க... அடிபொலியா இருக்கும்
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான சிக்கன் ப்ரை மிகவும் வித்தியாசமாக எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களின் பிடித்த உணவான சிக்கன் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். பல நன்மைகளை உடம்பிற்கு அளிக்கும் நிலையில், இதில் புரதம், குறைவான கொழுப்பு, நல்ல அமினோ ஆசிட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றது.
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிக்கனை மிகவும் வித்தியாசமான முறையில் சிக்கன் ப்ரை செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ
மல்லி - 1 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
முந்திரி - 10
பட்டை - 1
ஏலக்காய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 15 பல்
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1 கப்
வரமிளகாய் - 4
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் பொடி - அரை ஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு கடாய் ஒன்றில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு அதில் பூண்டு பற்களை போட்டு வதக்கவும்.
மல்லி, கடுகு, பெருஞ்சீரகம், சீரகம், மிளகு, முந்திரி, பட்டை, ஏலக்காய் இவற்றினை வறுத்து பொடியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். சிக்கனில் காஷ்மீர் மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.

ஊற வைத்த சிக்கனை கடாயில் சேர்த்து, அதனுடன் தக்காளி சாறு, புதினா இலை மற்றும் உப்பு போட்டு நன்றாக கிளறிவிடவும். தண்ணீர் பிரிந்து வந்த பின்பு வறுத்து அரைத்த பொடியிலிருந்து இரண்டு ஸ்பூன் போட்டு கிளறவும்.
பின்பு மிளகாய் வத்தலை விதையை நீக்கிவிட்டு சிக்கனுடன் போட்டு இறக்கினால் சுவையான சிக்கன் ப்ரை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |