ஆண்டின் கடைசி சூர்ய கிரகணம்! இந்த தவறுகளை செய்யக்கூடாதாம்
2022ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகண நேரத்தில், கர்ப்பிணி பெண்கள் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை பார்ப்போம்.
சூரியனுக்கும். பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. இந்த நிகழ்வினை சூரிய கிரகணம் என்கிறோம்.
2022ம் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 25ம் தேதி நிகழும். சூரியனின் கதிர்கள் மறையும் நேரம் அசுபமானதாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது அறிசியல் முதல் ஆன்மீகம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் படி, இரண்டுமே அசுபமானவைகளாக கருதப்படுகின்றன.
சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் ஏற்படும். தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழ உள்ள பகுதி நேர சூரிய கிரகணம் 2022 அக்டோபர் 25ம் தேதி மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42 வரை நீடிக்கும்.. இதில் 4.30 மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் சூரிய கிரகணத்தை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். இருப்பினும், இந்த கிரகண நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை பார்ப்போம்.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனால், கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.
கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும்.
கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை
கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.
சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.
குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது.
கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.