ஸ்பீக்கர் பாக்ஸில் அழுகிய நிலையில் 2 வயது சிறுவன்... சித்தப்பா அறையில் நடந்தது என்ன?
வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் ஸ்பீக்கர் பாக்ஸ் ஒன்றில் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் வசித்து வரும் குருமூர்த்தி என்னும் கூலி தொழிலாளி. இவரது இரண்டு வயது குழந்தை திருமூர்த்தி கடந்த 17ம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போன நிலையில், பெற்றோர்கள் பல இடங்களில் தேடிச் சென்றும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நான்கு நாட்கள் ஆகியும் சிறுவன் கிடைக்காமல் இருந்ததுடன், பொலிசாரும் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை குருமூர்த்தியின் தம்பி அறையில் ஸ்பீக்கர் பாக்ஸ் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளதையடுத்து, அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது அவர் பூனை இறந்திருக்கும் என்று அசால்ட்டாக கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.
அவர் வெளியேறிய பின்பு குறித்த ஸ்பீக்கர் பாக்ஸை உடைத்துப் பார்த்த போது காணாமல் போன 2 வயது சிறுவன் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளான்.

பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், குருமூர்த்தியின் தம்பி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆம் வீட்டில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் மற்றும் அண்ணி இடையே பிரச்சினை ஏற்பட்டது என்றும் இந்த கோபத்தினால் குறித்த குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து பாக்ஸில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
யாரும் பார்க்காத நேரத்தில் சடலத்தை வெளியே கொண்டு போட்டுவிடலாம் என்று எண்ணிய நிலையில், இவ்வாறு மாட்டிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |