கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திகொண்ட இருவர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் உறைந்த மக்கள்; காரணம் என்ன?
கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள உலகம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்துவருகிறது.
இதனிடையே, ஜப்பானில் மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் அடுத்தது உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை, உயிரிழந்த இருவருக்கும் செலுத்திய மாடர்னா தடுப்பூசியில் உலோகத் துகள்கள் இருந்ததாக கூறியுள்ளது.
மேலும் இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியதாவது, "மாடர்னா தடுப்பூசி 2 வது டோஸ் எடுத்துக்கொண்ட 30 வயதுடைய இருவர் தடுப்பூசி செலுத்தி கொண்ட சில நாட்களில் உயிரிழந்தனர். தடுப்பூசி உற்பத்தி செய்த மூன்று இடங்களுக்கும் தடுப்பூசி உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்த மூன்று இடங்களில் இருந்து வந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள்தான் உயிரிழந்தார்.
இதனால், நடந்த விசாரணையில் தடுப்பூசி நிரப்பப்பட்ட வயலில் உலோகத் துகள்கள் இருந்ததாகவும், அதுதான் அவர்களின் மரணத்திற்கு காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளது. மேலும், அந்த மூன்று இடங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சுமார் 1.63 மில்லியன் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
தடுப்பூசியின் செயல்திறன் அல்லது பாதுகாப்பு குறித்து இந்த தடை விதிக்கப்படவில்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.