18 அடி உயரத்தில் நித்தியின் புதிய சிலைக்கு கும்பாபிஷேகம்... வாயடைத்துப்போன பக்தர்கள்; எங்கு தெரியுமா?
18 அடி உயரத்தில் நித்தியானந்தாவின் உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலியல் குற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் சுவாமி நித்தியானந்தா டிமிக்கி கொடுத்துக்கொண்டு வீடியோகளை வெளியிட்டு கைலாசாவில் இருப்பதாக கூறி வந்துகொண்டு இருப்பது அனைவருக்கும் தெரியும்.
உடல் நிலை சரியில்லை எனவும், அண்மையில் கூறியிருந்தார். மேலும் இவரைப்பற்றி பிபிசி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது.
18 அடியில் புதிய சிலை
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு நித்தியானந்தாவுக்கு ஒரு கோவிலைக் கட்டி வந்துள்ள சம்பவம் தான் செம்ம ஹைலைட்டாக் ஆக உள்ளது.

முருகன் ஆலயமா?
இந்த கோவிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது. இந்த சிலையை கண்ட பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் அதிர்ச்சியடையந்துள்ளனர்.

பக்தர்கள் அதிர்ச்சி
ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை அமைந்திருக்கிறதாம்.
இதுகுறித்து, கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்கள் தெரிவிக்கையில், சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர்.
மேலும், ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்காததால் இப்படி உள்ளது எனக்கூறியுள்ளனர். நித்தியின் சிலையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பக்தர்களும் அந்த சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.