ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணை எடை குறைக்க உதவுமா?
உடல் எடை அதிகரிப்பு தற்போது சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதை சரி செய்ய தேங்காய எண்ணையை பெரிதும் உதவியாக இருக்கும்.
ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணை
தேங்காய் எண்ணெய் இல்லாத வீடுகள் இன்று கிடையாது என்றே சொல்லலாம். சமையல் முதல் கூந்தல் பராமரிப்பு, சரும நலன் என எண்ணெயின் பயன்பாடு ஏராளம்.
இந்த தேங்காய் எண்ணையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. காலை உழுந்தவுடன் தேனீர் மற்றும் பிற பொருட்களை குடிக்காமல் இந்த தேங்காய் எண்ணையை குடித்தால் எடை குறைப்பவர்கள் இலகுவாக குறைக்கலாம் என கூறப்படுகின்றது.
தேங்காய் எண்ணையை இன்னும் பல வழிகளில் சாப்பிட்டால் கூட உடல் எடை குறையும். அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி எடை குறைக்கிறது?
எளிமையாக ஜீரணிக்கும் - உணவில் நாம் தேங்காய் எண்ணையை சேர்த்து சமைக்கும் போது அது மற்ற எண்ணைகளை விட எளிதில் உணவை ஜீரணிக்க செய்யும். இதனால் எடை இலகுவாக குறையும் என கூறப்படுகின்றது.
ஹார்மோன்களின் சமநிலை - ஹார்மோன்கள் சமநிலையில் இல்லை என்றால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஹார்மோன்கள் சமநிலையில் இருந்தால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
இதில் முக்கிய பங்கு வகிப்பது தான் தேங்காய் எண்ணை. தேங்காய் எண்ணெய் ஹார்மோன்களின் சமநிலைக்கு பெரிதும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெயில் பாலிபீனால்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை நம் உடலில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
சர்க்கரை சமநிலை - உடலில் கொழுப்பு சேர்வதற்கான காரணங்களில் ஒன்று இரத்தத்தில் சக்கரை அளவு அதிகமாவது தான்.
ஆனால் தேங்காய் எண்ணையை நாம் சாப்பிட்டு வந்தால் நம் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகரிக்காமல், குறையாமல் நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
இதனால் எடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கபட்டு எடை இலகுவாக குறையும்.
உடல் எடை குறைக்க ஆசைப்படுபவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை குடித்து வந்தால் உடல் எடை குறையும். இதை செய்ய இயலாதவர்கள் நாம் தினமும் உணவிற்கு சேர்க்கும் எண்ணைகளை விட தேங்காய் எண்ணையை சேர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |