இந்த பூவின் நீரை தினமும் குடிங்க - இந்த ஆபத்தான நோய்கள் கிட்ட கூட வராது
உடலில் இருக்கும் கல்லீரல் பிரச்சனை மற்றும் இதய ஆரோக்கியம் போன்ற 7 வகையான நோய்களுக்கு தீர்வு தரும் ஒரு பூ தேனீரின் நன்மை பற்றி பார்க்கலாம்.
செம்பருத்தி பூ தேனீர்
தற்போது இருக்கும் வேலைப்பழு காரணமாக பலரும் உடலுக்கு ஆரோக்கிய உணவை கொடுக்க மறந்துவிட்டார்கள். இதனால் உடலில் பல புதிய புதிய நோய்களும் வந்து சேருகின்றன.
ஆனால் இயற்கையில் கிடைக்கும் உணவுகளில் நம் உடலை பாதுகாக்கும் நிறைய பதார்த்தங்கள் உள்ளன. தற்போது மக்கள் பெரும்பாலும் கல்லீரல் பிரச்சனை,மற்றும் எடை இழப்பு நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் இதுபோன்றவைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்காக தான் மிகவும் சிறந்த நிவாரணம் ஒன்றை சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அந்த வகையில் நாம் எல்லோரது வீட்டிலும் இருக்கும் செம்பருத்தி பூவை வைத்து அதில் தேனீர் போட்டு குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
செம்பருத்தி தேநீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்
இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் - பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை இதய நோய் பிரச்சனை தான். இதய நோய்களில் மிகவும் ஆபத்தான ஒன்று தான் உயர் ரத்த அழுத்தம்.
இந்த தேனீரில் உள்ள சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இது ஆய்விலும் தெரியவந்துள்ளது. செம்பருத்தி தேனீர் அருந்தி வந்த சிலருக்கு இந்த உயர் ரத்த அழுத்த பிரச்சனை இல்லாமல் போவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆரோக்கியமான இரத்த கொழுப்பு
நம் இதய ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான கொழுப்பு மிகவும் அவசியம். இதற்கு செம்பருத்தி தேனீர் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
செம்பருத்தி தேநீர் HDL (நல்ல) கொழுப்பை அதிகரித்து LDL (கெட்ட) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கிறது. கெட்ட கொழுப்பை கரைக்க வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் இந்த செம்பருத்தி பூ தேனீரை அருந்தி வரலாம்.
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கல்லீரல கொழுப்பு என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இது யாருக்காவது வந்து விட்டால் அது பல நோய்களுக்கு ஒரு ஆரம்ப கட்டையாக இருக்கும்.
அந்த வகையில் கல்லீரலில் நாம் நச்சுக்கள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நோய்களுக்கான வழி மிகவும் குறைவாக இருக்கும். இதற்கு காலையில் செம்பருத்தி நீர் அருந்தி வரலாம்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்
தற்போது புற்றுநோய்கள் சாதாரணமாக வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வந்துகொண்டு இருக்கிறது. இதிலும் பெண்கள் அதிகம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
சிலர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் செம்பருத்தி தேனீர் குடித்து வந்தால் உடலுக்கு நன்மை நிறைவாக தரும்.
இந்த செம்பருத்தி தேனீரை குடிக்க கஷ்டமாக இருந்தால் புளிப்பு, குருதிநெல்லி போன்ற சுவையுடன், சேர்த்து குடிக்கலாம்.
உலர்ந்த பூக்கள் அல்லது சாற்றை கொதிக்கும் நீரில் ஊறவைத்து இந்த தேனீரை தயாரிக்கலாம். இதில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் அப்படியே இறங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |