வேகமாக பரவும் 'ஜாம்பி மான் நோய்' மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதா? நிபுணர்களின் கருத்து
அமெரிக்காவில் மான்களுக்கு வேகமாக பரவியிருக்கும் 'ஜாம்பி மான் நோய்' விரைவாக மனிதர்களுக்கும் தொற்றும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஜாம்பி
ஜாம்பி நோய் ஒரு நரம்பியல் நோயாகும். இந்த நோய் விலங்குகளை பாதிக்கும் தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. இது மூளை மற்றும் உடலின் பல உறுப்புக்குளை நிலைகொள்ள செய்கிறது.
இது முதலில் மூளையை பாதிப்படைய செய்து ஜாம்பி போல நடத்தையை மாற்றும். இந்த நோய் வந்து விட்டால் உடலில் பல மாற்றங்கள் காணப்படும்.
அதாவது எச்சில் வடிதல், தடுமாறுதல், சோம்பல் மற்றும் வெற்றுப் பார்வை போன்றவை இந்த தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கின்றன.
இது முதலில் மான்களை பாதித்ததால் தான் இந்த நோய்க்கு ஜாம்பி மான் நோய் என்ற பெயர் வந்துள்ளது. இந்த நோய் தற்போது மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதாக கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால் இதற்கான போதிய ஆதாரம் இன்னும் கையளிக்கப்படவில்லை. ஆனால் விலங்குகளின் இறைச்சியை மனிதர்கள் உண்பதால் மனிதர்களுக்கு இந்த நோய் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது.
இந்த நோய் தற்போது விலங்குகளில் பரவி வருவதால் மனிதர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். இது மனிதர்களிடம் பரவுதற்கு வாய்பு உள்ளதற்கான அதாரங்கள் இல்லாவிடிலும் நோய் வராமல் எம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும்.