ஜிவி பிரகாஷை தொடர்ந்து மற்றொரு நட்சத்திர ஜோடி பிரிகின்றதா? புயலை கிளப்பிய புகைப்படம்
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதிகளைத் தொடர்ந்து மற்றொரு நட்சத்திர ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் பிரபலம் சையிப் அலிகான்
கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதிகள் பிரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலிவுட் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சையிப் அலிகான்(53) கடந்த 1991ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்தார். இந்த ஜோடிகள் கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், இவர்களுக்கு சாரா அலிகான் என்ற மகள் உள்ள நிலையில், அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சையிப் அலிகானுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் 10 வயது வித்தியாசம் உள்ள நிலையில், தற்போது இவர்களிடையே விரிசல் ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கேள்விக்கு முக்கிய காரணம் என்னவெனில், சையிட் தனது கையில் காதல் மனைவி கரீனாவின் பெயரை டாட்டூ குத்தியிருந்தார்.
தற்போது அதனை நீக்கிவிட்டு சூலம் போன்ற டிசைனை டாட்டூவாக குத்தியுள்ளார். இதை கவனித்த நெட்டிசன்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |