12 ராசிகளில் இந்த 3 ராசிகளுக்கு கொஞ்சம் கூட பொறுமை இருக்காதாம்
ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்களுக்கு பொறுமை மிகவும் குறைவாக இருக்குமாம். எந்த விஷயமாக இருந்தாலும் அவசரப்படுவார்களாம். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொறுமை குறைவான ராசிகள்
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்களும், இயல்புகளும் உள்ளன. அதன்படி சில ராசியில் பிறந்தவர்கள் பொறுமை இழந்து இருப்பார்களாம்.
அவர்கள் இயல்பாகவே மிகவும் அதிகமான கோபம் கொண்டவர்களாக இருப்பார்களாம். குறிப்பிட்ட சில விஷயங்கள் உடனடியாக நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
இவர்களுக்கு பொறுமை என்பதே இருக்காதாம். ஒரு வேலை உடனே முடிக்கப்படவில்லை என்றாலும், யாராவது தாமதமாக பதிலளித்தாலும், அல்லது மற்றவர்கள் தங்கள் கருத்துகளைப் புரிந்து கொள்ளும் வேகத்தில் இல்லாதாலும்கூட, இவர்களுக்கு எரிச்சலும் பொறுமையின்மையும் வெளிப்படும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொறுமையற்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் ராசியை செவ்வாய் பகவான் ஆள்கிறார். இவர் ஆற்றல், வீரம் மற்றும் வேகம் ஆகியவற்றை ஆழும் கிரகமாம்.
இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் முன்னோடிகளாக செயல்பட விரும்புகின்றனர். இதனால் ஒரு விஷயத்தை தொடங்கி உடனே முடித்து விட வேண்டும் என்பது இவரது குறிக்கோள்.
காத்திருத்தல் அல்லது மெதுவான செயல்முறைகள் இவர்களுக்கு பிடிக்காது. ஒரு விஷயத்தில் ஆர்வம் வந்தால் அதை உடனே முடிப்பார்கள்.
தாமதம் ஏற்பட்டால் கோபமடைந்து எரிச்சல் அடைவார்கள். எப்போதும் முதல் ஆளாக இருக்க விரும்புவதால் மற்றவர்களுக்காக காத்திருப்பது அல்லது பின்வாங்குவது இவர்களுக்கு பிடிக்காது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிக சுறுசுறுப்புடனும், விரைவான சிந்தனையும் கொண்டவர்கள். இவர்களை புதன் பகவான் ஆள்கிறார். புதன் புத்திசாலித்தனம் மற்றும் தகவல் தொடர்பை குறைக்கும் கிரகமாவார்.
எனவே இவர்களுக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் தேவைப்படுகிறது. இவர்களின் முதலில் வெறுக்கும் விடயம் சலிப்பு தான். ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதையோ ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதோ இவர்கள் விரும்புவதில்லை. இதுவே இவர்களின் பொறுமை குறைபாடு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகசம், சுதந்திரம் மற்றும் உடனடி திருப்தியை விரும்புபவர்கள். இவர்களை குரு பகவான் ஆள்கிறார். குரு அறிவு, சாகசம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும்.
இவர்கள் பெரிய இலக்குகளை நோக்கி செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்களின் சுதந்திர உணர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது அல்லது சலிப்பை ஏற்படுத்தும் வகையில் நீண்ட நடைமுறைக்குள் அடைப்பது போன்ற விஷயங்கள் பொறுமையின்மையை ஏற்படுத்தும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).