இவங்க இதயம் சொக்கத்தங்கமாம்... இளகிய மனம் கொண்ட ராசிகள்
பொதுவாகவே ஒரு தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தோற்றம், நிறம், விசேட ஆளுமைகள், மற்றும் குணங்கள் என்பவற்றால் தனித்துவமானவர்களாகவே இருக்கின்றோம்.
ஜோதிட சாஸ்திரமானது ஒருவருடைய சிறப்பு ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பிறப்பு ராசியானது நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் உணர் திறன் கொண்ட மனம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் துரோகிக்க கூட மனம் இளகி மன்னிப்பு கொடுக்கும் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படி மன ரீதியான மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
அன்பு மற்றும் காதலின் கிரகமாக சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் இயல்பாகவே மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களை முதுகில் குத்திவிட்டு மன்னிப்பு கேட்டால் கூட மன்னித்துவிடும் பண்பு இவர்களிடம் நிச்சயம் இருக்கும். தேவையான விடங்களில் பிடிவாதம் பிடிப்பதிலும் இவர்கள் வல்லவர்கள்.
அது போல் தனக்கு தீங்கு செய்தவர்களுக்கும் உதவும் மனநிலை இந்த ராசியினருக்கு நிச்சயம் இருக்கும். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு இவர்களிடம் பொறுப்புணர்வு மற்றும் கொறுடை இருக்கும்.
சிம்மம்
ஒவ்வொரு ராசியும் உடலின் ஒரு ஆற்றல் மையத்துடன் நிச்சயம் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும், சிம்மம் இதய சக்கரத்துடன் தொடர்புடையது.
எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் எளிதில் மனம் நெகிழ்ந்துவிடும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பார்பதற்கு கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் இந்த ராசியினர் மனதளவில் குழந்தையாக இருப்பார்கள்.
தாக்கவரும் புலியை பார்த்து குழந்தை சிரிப்பது போல், இவர்கள் துரோகிகளையும், எதிரிகளையும் கூட எளிதில் மன்னித்துவிடுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரன் கிரகத்தால் ஆளப்படுவதால், இவர்களும் இயல்பாகவே மனதளவில் மென்மையானவர்களாக இருப்பார்கள்.
இவர்களை மோசமாக நடத்தியவர்களுக்கும் கூட உதவி செய்ய வேண்டிய நிலை வந்தால், கொஞ்சமும் தயங்காமல் உதவும் குணம் இவர்களிம் இருக்கும்.
இலக்கின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருந்தாலும் பாசத்துக்கு மட்டுமே அடிபணியும் பண்பை கொண்டிருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |