சுக்கிரன் எடுத்த புது அவதாரம்: பண மழையில் நனையப் போகும் யோகக்கார ராசிகள்
பொதுவாகவே நவகிரகங்களில் மங்களகரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான்.
இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவை கொடுப்பதில் வல்லவர்.
இதனால் சுக்கிரனின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனின் சுக்கிரனின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்துகின்றது.
இவ்வளவு சிறப்பு கொண்ட சுக்கிர பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் சரி எடுத்து கொள்வார்.
இதன்படி, அசுரர்களின் குருவாக சுக்கிர பகவான் கருதப்படுகிறார். இவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்கிறார். வருகின்ற பெப்ரவரி மாதத்தில் மகர ராசியில் பயணிக்கவுள்ளார்.
அந்த வகையில் சுக்கிர பகவானின் இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப் போகின்றது என்பதனை கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் கிட்டும் ராசிகள்
1. மிதுன ராசி
சுக்கிர பகவானின் வரவால் பண மழை கொட்டப் போகின்றது. பணத்தினால் வரும் எந்த கஷ்டமும் இனி வராது. எந்தவிதமான ஆரோக்கிய குறைபாடும் இருக்காது.
இதனால் குடும்பத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். பணவரவில் உள்ள அனைத்து சிக்கல்களும் நீங்கி சுக வாழ்வு பெறுவீர்கள்.
2. கன்னி ராசி
கன்னி ராசியில் சுக்கிரன் ஏழாவது இடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார். நீங்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும். இந்த வருடத்தில் உங்களுக்கு பணவரவு அதிகமாகும். இதனால் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது.
வேலை செய்பவராக இருந்தால் சம்பள உயர்வு, பதவி உயர்வு, மகிழ்ச்சியான சூழல் கிடைக்கும். அத்துடன் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகி நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
3. கடக ராசி
சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்துள்ளார். அரசியல் ஆசை இருப்பவர்களுக்கு இதனால் வாய்ப்பு கிடைக்கும். சொந்த தொழில் ஆரம்பிக்க நினைத்தவர்கள் இது தான் சரியான தருணம் ஆரம்பிக்கலாம்.
இதுவரையில் உங்களுக்கு இருக்கும் அனைத்து குறைகளும் நீங்கும். கணவன்- மனைவி சண்டைகள் குறைந்து குடும்பத்திற்குள் இருக்கும் சந்தோசம் கட்டியெழுப்பப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |