தன்னை விட பெரிய பெண்ணை திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஆண்களே இனி மிஸ் பண்ணீடாதீங்க
திருமண பந்தத்தில் ஆணை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டுமா அல்லது பெண்ணை விட ஆண் குறைந்த வயதுடன் இருக்க வேண்டுமா இருவருக்கும் ஒரே வயது இருந்தால் நல்லதா என பல்வேறு சந்தேகங்கள் பெற்றோர்களின் மனதில் எழும்.
உண்மையில், வயதுக்கும் திருமண பந்தத்திற்கும் பெரிய தடையோ, பிரச்சனையோ இல்லை.
இருப்பினும் இது போன்ற அமைப்பு ஜாதகத்தில் சில கிரக அமைப்பு அடிப்படையில் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் வீடு திருமண பந்தத்தைத் தரக்கூடிய துணை, பங்குதாரரை குறிக்கக்கூடிய வீடாகும்.
ஜாதகத்தில் 7ம் வீட்டில் சனி பகவானும், 8ல் ராகு போன்ற அமைப்பு அல்லது 7ல் சனி, ராகு என இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமண தாமதம் அல்லது ஆணை விட அதிகமான வயது இருக்கும் பெண்ணுடன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக 7ல் சனி இருந்தால் இதுபோன்ற விஷயம் நடக்கும்.
ஆணை விட பெரிய பெண்ணை திருமணம் செய்தால் என்ன நடக்கும்?
மணப்பெண் மாப்பிள்ளையைவிட இரண்டொருவயது கூடுதலாக உள்ளவரென்றால் தவறில்லை.
அதைவிட அதிகமான வயது என்றால் வேறு இடம்பார்க்கலாம்.
ஜாதகம் பொருந்தி வந்தால், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்தால், தாராளமாகத் திருமணம் செய்யலாம். எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
திருமணம் செய்து கொள்ளக்கூடிய மணமக்களில் ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாக இருந்தால், அவர்களின் வயோதிக காலத்தில் யாரேனும் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், மற்றொருவர் அந்த சங்கடங்களைத் தாங்கி வாழ்க்கையை சமாளிக்க வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்ற வயது இடைவெளி வைத்து திருமணம் செய்து வைத்தனர்.
அதிக வயதுடைய பெண்கள் தங்கள் துணையை ஒரு குழந்தை போல கவனித்து கொள்வார்கள். விட்டு கொடுப்பு அதிகம் இருக்கும்.
குறிப்பாக புரிந்துணர்வு கொண்ட தம்பதிகளாக இருப்பார்கள்.
வயது என்பது என் மட்டும் தான். நாம் வாழும் வாழ்க்கையில் தான் எல்லாமே அடங்கியுள்ளது. நல்ல பெண் கிடைத்தால் வயதை பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளுங்கள்.