சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்: இன்னும் ஒரு வருடத்திற்கு ராஜா போல் வாழப்போகும் 3 ராசிகள்
வேத சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாக சுக்கிரன் கருதப்படுகிறார். கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன.
இவ்வாறு நிகழும் போது பல ராஜ யோகங்கள் நிகழும். அவற்றுள் சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் ஒன்றாகும்.
இந்த ராஜயோகத்தின் பலன்கள் இந்த ஆண்டு தொடங்கி அடுத்த ஆண்டு வரை குறிப்பிட்ட ராசிகளுக்கு முழுமையாக கிடைக்கும். இந்த சக்தி வாய்ந்த மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் எவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம் | ரிஷப ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. ஆளுமை மேம்படும். எதிர்காலத்தை சிறப்பிக்க மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை வெற்றியில் முடியும். பணத்தை ஈட்ட பல வழி பிறக்கும். |
கடகம் | கடக ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் பல நேர்மறையான மாற்றங்களை வழங்கப்போகிறது. வருமானம் அதிகரித்து பொருளாதாரத்தில் உயர்வீர்கள். வணிகர்கள் பல ஒப்பந்தங்களை கைப்பற்றுவார்கள். கடக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல்வேறு பிரச்சனைகளை விரைவாக தீர்க்க முடியும். பண பிரச்சனை முடிவிற்கு வரும். |
சிம்மம் | சிம்ம ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணத்தின் அதிபதியாக திகழ வாய்ப்பு கிட்டும். வேலை வியாபாரத்தில் சிறப்பான நன்மை கிடைக்கும். திருமணமானவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். பணத்தின் தேவை குறைந்து பணம் சேமிக்கப்படும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).