அதிர்ஷ்டம் என்று இந்த மோதிரத்தை அணியாதீங்க! பாரிய விளைவு ஏற்படுமாம்
இன்று பலரும் விரும்பி அணியும் ஆமை மோதிரம் சில ராசியினருக்கு நன்னைக்கு பதில் தீங்கு விளைவிக்கும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆமை மோதிரம்
ஆமை மோதிரத்தை தற்போது அதிகமானோர் அணிந்திருப்பதை நாம் அவதானித்திருப்போம். இவை நாகரீகமாகவும், சில காரணங்களுக்காகவும் அணிந்து வருகின்றனர்.
ஆனால் இந்த ஆமை மோதிரத்தை அணிவது வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஆமை மோதிரத்தை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆமை மோதிரத்தின் நன்மைகள்:
ஆமை விஷ்ணுவின் அவதாரமாக ஜோதிரடத்தில் கூறப்படும் நிலையில், இந்த மோதிரத்தினை அணிவது லட்சுமி தேவியை மகிழ்விக்குமாம். மேலும் அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் ஆமை பார்க்கப்படுவதால் இதனை மோதிரமாக அணிந்தால் வீட்டில் செல்வசெழிப்பு அதிகரித்து காணப்படும்.
அணியக்கூடாத ராசியினர்: மேஷம், கன்னி, விருச்சிகம், மீனம்
அணிய வேண்டிய ராசியினர் : மகரம், ரிஷபம்
அணிவதற்கான காரணம்: கையில் பணம் தங்காமல் அவஸ்தை படுகிறவர்கள், ஆக்ரோஷமான நடத்தை உள்ளவர்கள் ஜோதிட நிபுணரின் ஆலோசனையுடன் அணியலாம்.
ஒரு முறை அணிந்த பிறகு, அதை மீண்டும் மீண்டும் அகற்றக்கூடாது, இல்லையெனில் அதன் விளைவு குறையத் தொடங்குகிறது என்ற நம்பிக்கையும் உள்ளது.