இந்த ராசி பெண் கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிக்கோங்க
ஒருவரது ஜாதகம் அவரின் கணவர் அல்லது மனைவிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்பது ஜோதிட நிபுணர்களின் கருத்து.
அந்த வகையில் மீனம், ரிஷபம், கடகம் ராசிகளில் பிறந்த பெண்கள், கணவருக்கு செல்வத்தை கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
ஆனால் தனுசு ராசியில் பிறந்த பெண்கள், தாலி கட்டிய கணவருக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் நிச்சயம் கொண்டு வருவார்கள் என கூறப்படுகிறது.
எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் தனுசு ராசி பெண்கள், மிகவும் நேர்மையானவர்களாக அதே சமயம் ஆன்மீகத்தில் முழு நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.
சுப கிரகங்களின் துணையுடன் வீட்டிற்கு செல்வத்தை கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
கணவரின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும், சமூகத்தில் அவருக்கான அந்தஸ்து உயரும். சொந்த தொழில் செய்பவராக இருந்தால் அதில் முழு லாபத்தை அடைவார்கள்.
பணியிடங்களில், வெளியிடங்களில் கணவருக்கான மரியாதையும், மதிப்பும் அதிகரிக்கும், உயர்பதவிகள் அவர்களை தேடிவரும்.
குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகள் ஏதுமின்றி அன்பும் அரவணைப்பும் அதிகரிக்கும்.
மிக முக்கியமாக கணவருக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவர்கள், தம்பதியராக சேர்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு எப்போதுமே வெற்றி உண்டு.
