ஜூலை 28 மோசமான பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி யார்?
ஜூலை 28, 2025 அன்று ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வான செவ்வாய் மற்றும் கேதுவின் இணைவு துலாம் ராசியில் நிகழவிருக்கிறது.
செவ்வாய்- தைரியம், வீரம் மற்றும் செயல்திறன்
கேது- ஞானம், ஆன்மீகம் மற்றும் மோட்சம்.
இந்த இரண்டும் துலாம் ராசியில் இணைவதால் மனதில் கொந்தளிப்பு, அமைதியின்மை மற்றும் உள் மோதல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், செவ்வாய் அல்லது கேது பலவீனமான நிலையில் இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
செவ்வாய் கோபத்தைக் குறிப்பதால், துலாம் ராசியினர் சில நேரங்களில் கோபப்படலாம் அல்லது மோதல்களில் ஈடுபடலாம்.
எனவே மனதை அமைதியாக்க ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள், தியானத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
மற்றவர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம், மௌனத்தை கடைபிடிப்பது சிறந்தது.
சிந்தனையுடன் செயல்படுவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம், பொறுமையை கையாளவும்.
சில நேரங்களில் குழப்பங்கள் இருந்தாலும், ஆன்மீக ரீதியில் முன்னேற உதவும் என கூறப்படுகிறது.
ஜூலை 28, 2025 அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைபிடித்து செவ்வாய்- கேதுவின் இ்ணைவை சாதகமாக்கிக் கொள்ளுங்கள்.
