2024-ல் பணம் கொட்ட போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்
வரும் 2024 -ம் ஆண்டு சனி மற்றும் குருபகவானால் பணவரவு பெறப்போகும் ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.
குரு மற்றும் சனி
சனி பகவான் நாம் செய்யும் நண்மைகள், தீமைகள் என பாரபட்சம் பார்க்காமல் நமக்கு திருப்பி கொடுப்பவர் தான் சனிபகவான். குறிப்பாக, செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது தான் நீதிமானாக இருக்கும் சனிபகவானின் வேலை.
நவகிரகங்களில் குரு பகவானின் பயணம் மங்களகரமானது.இடம் மாற்றத்தால் பல சிக்கலை ஏற்படுத்தினாலும் அதுவும் மங்களகரமாக பார்க்கப்படுகிறது. 2024 -ம் ஆண்டில் ரிஷப ராசிக்குள் குரு பகவான் நுழைகிறார்.
கும்ப ராசியில் பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த நவம்பர் 4 -ம் திகதி நிவர்த்தி அடைந்துள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் நிலை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2024 -ம் ஆண்டில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்களை பார்க்கலாம்.
கடக ராசி
2024 -ம் ஆண்டில் கடக ராசி உள்ளவர்களுக்கு செல்வ யோகம் சிறப்பாக இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும். திருமண உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
விருச்சிக ராசி
2024 -ம் ஆண்டில் விருச்சிக ராசி உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். சனி மற்றும் குரு இணைவதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மற்றவரிடம் நல்ல மரியாதை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலையும், திருமணமாகாதவர்களுக்கு திருமணமும் கைகூடும்.
மேஷ ராசி
2024 -ம் ஆண்டில் மேஷ ராசி உள்ளவர்களுக்கு குரு மற்றும் சனி இணைந்த காரணத்தினால் ராஜயோகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |