முடி உதிர்வால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் நிச்சயம் அற்புதம் செய்யும்
முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து அடர்த்தியாகவும், நீீளமாகவும் முடி வளர்வதற்கு உதவி செய்யும் சில உணவுகளை குறித்து இங்கு காணலாம்.
முடி உதிர்வு
இன்று பெரும்பாலான பெண்களின் முக்கிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வு தான். ஆம் பெண்களின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தலே.
முடி உதிர்வைத் தடுப்பதற்கு நமது உணவை மேம்படுத்துதல் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை சேர்த்து வர வேண்டும். இவை இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் செய்கின்றது.
தாவர அடிப்படையிலான உணவுகளில் உள்ள பைலேட்ஸ் எனப்படும் கலவையானது துத்தநாகத்தை சிறப்பாக பிணைக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துத்தநாகம் உள்ள உணவுகள்
காளான்களில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது மட்டுமின்றி உடலுக்கு தினமும் 7 சதவீத துத்தநாகத்தை அளிக்கின்றது. இதனால் முடிவளர்ச்சியை அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.
இதோ போன்று கீரையில் 0.16 கிராம் துத்தநாகம் இருப்பதால் தினமும் கீரையை எடுத்துக்கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன், முடி உதிர்வும் தடுக்கப்படுகின்றது.
புரதம் மற்றும் துத்தநாகம் நிறைந்த பருப்பு வகைகளை நாம் எடுத்துக்கொண்டாலும் விரைவான முடி வளர்ச்சியையும், முடி அமைப்பையும் பெற முடியும். 100 கிராம் கொண்டைக்கடலை சுமார் 1.5 மில்லி கிராம் துத்தநாகத்தைக் கொடுக்கக்கூடியது.
பூசணி விதையிலும் சுமார் 2 கிராம் துத்தநாகம் இவை முடி உதிர்தலை மாற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றது.