கேரளாவில் புதியதாக பரவிய சிகா வைரஸ்- 15 பேர் பாதிப்பு உயர்வு!
கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது மேலும் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த 19 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.
இதில், 13 பேருக்காவது சிகா வைரஸ் தொற்று இருக்கும் என எதிர்பார்ப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியிருந்தார்.
தற்போது, சிகா வைரஸ் பாதிப்பு 15ஆக உயர்ந்துள்ளது. சிகா வைரசால் பாதிக்கப்பட்ட 15 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் முடியாத நிலையில் சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.