நடிப்புன்னா இப்படி இருக்கணும்... அரங்கத்தையே கண்ணீரில் ஆழ்த்திய பெண்! வைரலாகும் வீடியோ
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சியின் அறிமுக எப்பிசோடில் தலைகவசம் அணியாது செல்வதால் ஏற்படும் விபத்துக்களால் இறப்பவர்களின் உறவுகள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகன்றார்கள் என்பதை தத்ரூபமாக காட்டிய பெண் ஒருவரின் நடிப்பு திறமையை காட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
மகா நடிகை சீசன் 2
பெண்களின் நடிப்பு திறமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகியுள்ளது.

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சி ஏற்கனவே முதல் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் மேலும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மூன்று முக்கிய பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், அனுபவம் மிக்க நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
குறித்த நிகழ்ச்சியின் அறிமுக எப்பிசோட்டில் பெண்ணொருவரின் கண்ணீர் மல்க வைக்கும் அசாத்திய நடிப்பு திறமைக்கு பராட்டுகள் குவிந்து வருகின்றது. வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |