அழகில் தேவதை போல மின்னும் சாரா! பேரழகுக்கு காரணம் இதுதான்... அர்ச்சனா வெளியிட்ட அசத்தல் டிப்ஸ்!
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பதின்பருவ பெண்களின் சருமம் ஓரளவிற்கு மிருதுவாக இருக்கும் என்பதால், சாஃப்ட் ட்ரீட்மென்ட்டுகள் போதும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் யூட்டிப் செனலில் காணொளி வெளியிட்டுள்ளார். அதில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சிறிதளவு பாலேடு, சர்க்கரை, ஓட்ஸ் மற்றும் கத்தாழை ஆகியவற்றை எடுத்து, அதனை நன்கு கலந்து முகத்தில் அப்லை செய்து நன்கு ஸ்க்ரப் செய்யவேண்டும்.
அழுத்தி ஸ்க்ரப் செய்யவேண்டாம். முகத்தில் தேய்த்த பிறகு மூன்று நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்துத் துடைத்துக்கொள்ளலாம்.
அடுத்தபடியாக முகத்தில் ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே செய்யவேண்டும்.
சுத்தமான ரோஸ் வாட்டர் இப்பொழுதெல்லாம் கிடைப்பது அரிது.
அப்படி சுத்தமான ரோஸ் நீர் கிடைத்தால், அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து, தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இது சருமத்தை மிருதுவாக்கும்.
அடுத்தது ஃபேஸ் பேக். இதற்கு சிறிதளவு கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், கற்றாழை மற்றும் தயிர் ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் அப்லை செய்யவேண்டும். இது நன்கு காய்ந்த பிறகு, முகத்தைக் கழுவவேண்டும். அவ்வளவுதான்.
நிச்சயம் இப்போது உங்கள் குழந்தையின் சருமம் மிருதுவானதாக இருக்கும். இதனை அனைவரும் உங்கள் பதின்பருவ மகளுக்கு நிச்சயம் இது ஒர்க் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.