ஜனநாயகனுக்கான ரூ. 220 கோடி சம்பளத்தை விஜய் திருப்பிக் கொடுத்துட்டாரா? பிரபல நடிகை ட்வீட்!
ஜனநாயனாயன் திரைப்படத்துக்காக தான் பெற்ற பெரும் தொகை சம்பளப்பணத்தை மொத்தமாக நடிகர் விஜய் திருப்பிக்கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் மற்றும் தவெக தலைவரின் இறுதி படமான ஜனநாயனன் திரைப்படம் ஜனவரி 9ம் திகதி திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் யாரும் எதிர்பாரத வகையில் ஏப்ரல் மாதம் ஆன்லைனில் கசிந்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஜனநாயகன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
ஆனால் ஆன்லைன் கசிவால் ஜனநாயகன் பட பிசினஸ் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து தன் கடைசி படத்தில் நடிக்க கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சம்பளமாக வாங்கிய ரூ. 220 கோடியை விஜய் திருப்பிக் கொடுத்திருக்கிறாரார் என்ற தகவல் இணையத்தில் பரவிவருகின்றது.

நடிகை அம்பிகா ட்வீட்
தயாரிப்பாளரிடம் சம்பளத்தை திருப்பிக் கொடுத்துட்டார் விஜய் என்று கேள்விப்படுகிறேன். அது உண்மை எனில் சிறந்த செயல் என பாராட்டியிருக்கிறார்.

அம்பிகாவின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்களோ, ஜனநாயகன் படம் எப்பொழுது ரிலீஸானாலும் பிளாக்பஸ்டர் தான். நாங்களே ஒவ்வொருவரும் பல முறை அந்த படத்தை பார்ப்போம்.

விஜய்ணா தன் சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வேண்டியது இல்லை. இருந்தாலும் அது அவரின் நல்ல குணத்தை காட்டுகிறது. தன்னால் யாருக்கும் நஷ்டம் வரக் கூடாது என நினைக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகன் லீக்கானதால் தானே இந்த பிரச்சனை எல்லாம் என்று தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ரூ. 220 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்ட தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.