சிறுத்தையுடன் ஓட்டப்பந்தயம் வைத்த யூடியூப் பிரபலம்! படுவைரலாகும் காணொளி
உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவரான ஸ்பீட் தற்போது சிறுத்தையுடன் ஓட்டப்பந்தயம் வைத்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தற்காலத்தில் சமூக ஊடகங்கள் இன்றி யாராலும் ஒரு நாளை கூட முழுமையாக கடந்த முடியாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.

அந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.
இதில் தீய பக்கம் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்களுக்கு சமூக ஊடகங்கள் ஓர் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.
அப்படி நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் ஏராளமான காணொளிகளுள் குறிப்பிட்ட சில காணொளிகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்தவகையில்,உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவரான ஸ்பீட் தற்போது சிறுத்தையுடன் ஓட்டப்பந்தயம் வைத்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவரான ஸ்பீட் என்பவர், ஸ்பீட் ஐஷோஸ்பீட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உலகளவில் அதிகம் பாலோவர்ஸ்களை கொண்ட பிரபல சேனல்களில் ஒன்றாக ஐஷோஸ்பீட் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
I Raced A Cheetah! 🐆🐆 pic.twitter.com/fbS4Nei8Nd
— Speed⭐️ (@ishowspeedsui) January 3, 2026