லட்ச ரூபாய்க்கு காயின்களை சேர்த்து புது கார் வாங்கிய நபர்! காரின் விலை எத்தனை லட்சம் தெரியுமா?
யூடியூப்பில் உணவு ரிவ்யூ செய்து பேமஸ் ஆனவர் இர்பான் லட்ச ரூபாய்க்கு காயின்களை சேர்த்து புது கார் வாங்கி அசத்தியுள்ளார்.
இவரது இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை 30 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
யூடியூபில் பாப்புலராக இருக்கும் இவர் சில சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரிவ்யூ செய்த ஓட்டல் ஒன்று சீல் வைக்கப்பட்டது.
அங்கு இருந்து கெட்டுப் போன சிக்கன், மட்டன், மற்றும் மீன் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் ஆகா ஓகே என ரிவ்யூ செய்த ஓட்டலுக்கு சீல் செய்யப்பட்டதை அடுத்து இர்பான் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தான் அந்த உணவகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரிவ்யூ செய்ததாகவும், அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவுகள் நல்லா இருந்ததால் தான் நான் அப்படி ரிவ்யூ செய்தேன் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இர்பான் சில்லரை காசு கொடுத்த கார் வாங்கிய சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. காரின் விலை 2 லட்சம் மதிப்புள்ள என்று கூறப்படுகின்றது.

