ரத்த வெள்ளத்தில் இன்ஸ்டாகிராம் காதலி... நொடியில் எஸ்கேப் ஆகிய காதலன்
இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்த சிறுமி திடீரென பேச்சை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் அவரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேசாத இன்ஸ்டாகிராம் காதலி
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதல் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
வசந்த் மதுரையில் கல்லூரி ஒன்றில் படித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வசந்த் ஒரு மாதத்திற்கு முன்பு மதுரையில் ஏற்பட்ட பிரச்சினையால் சிறைக்கு சென்று வந்துள்ளார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியதோடு, அவரது நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார்.
இத்தருணத்தில் மாணவி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற நிலையில், அவரை வழிமறித்து வசந்த் பேச முயற்சித்துள்ளார். ஆனால் சிறுமி பிடிகொடுக்காமல் செல்லவே, கோபத்தில் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியை சரமாறியாக குத்திவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
அவ்வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை தூக்கி மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தலைமறைவாக இருந்த இளைஞரை யும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |