2 நாட்களாக மலையில் சிக்கிய இளைஞர் - மீட்புப் பணியில் போராடும் ராணுவம்;
குரும்பாச்சி மலையில் இளைஞர் ஒருவர் இரண்டு நாட்களாக சிக்கி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளா, பாலாக்காட்டை சேர்ந்தவர் பாபு(23). இவர்கள் கடந்த நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளனர். அப்போது மலையில் இருந்து இறங்கியபோது பாபு மட்டும் பள்ளமான பாறையின் இடுக்கில் சிக்கியுள்ளான்.
அவர்களுடன் சென்ற நண்பர்கள் அவரை எவ்வளவு தான் மீட்கும் முயற்சியில் இறங்கினாலும் அது முடியவில்லை. இதன்பின்னர், மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் அளித்துள்ளனர்.
இதன்பின் மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.
தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிக்காப்டர் மூலம் கயிறை கொடுத்து பாபுவை மீட்க முயன்றனர்.
ஆனால் அந்த கயிறு பாபுக்கு எட்டாமல் போயுள்ளது. மீட்பு பணிகள் ஒரு நாளை கடந்த நிலையில், இதற்கிடையே, மலையில் சிக்கியிருக்கும் இளைஞருக்கு உணவு, தண்ணீர் கொடுக்க முயற்சி எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி அந்த வாலிபர் சிக்கியுள்ள நிலையில், அவரை மீட்க ராணுவம் உதவி கேட்கப்பட்டது. ராணுவம் நேற்று இரவில் இருந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
For the past 26 hours and counting, rescue officials are in #Kerala trying to get to this 23-year-old trekker stuck in a cavity on the side of a hill. So far, they haven't been able to reach him. Kerala CM has now asked Indian Army for help. pic.twitter.com/tOf7dBKfCQ
— Sanyukta (@dramadhikari) February 8, 2022