நொடியில் தண்டவாளத்தில் குதித்த இளைஞர்! காவலர் செய்த தரமான சம்பவம்
இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று தண்டவாளத்தில் குதித்த நிலையில், அவரை நொடிப்பொழுதில் காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வைரல் வீடியோவில், 18 வயது சிறுவன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருப்பதைக் காணலாம். சில வினாடிகளுக்குப் பிறகு, அவன் எதிரே வந்துகொண்டிருக்கும் மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் குதிக்கிறான்.
அந்த சமயம் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஹிருஷிகேஷ் மானே என்பவர் அவரது உயிரை பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் உயிரைப் பணயம் வைத்து தண்டவாளத்தில் குதித்து சிறுவனைக் காப்பாற்றினார். சில நொடிகள் தாமதமாகி இருந்தாலும் இருவரின் மீதும் ரயில் ஏறி இருக்கும், அதற்கும் போலீஸ் அச்சிறுவனை காப்பாற்றிவிட்டார்.
மேலும் இந்த வீடியோவுடன் "ஜவானுக்கு சல்யூட்" என்று கேப்ஷன் பதிவிடப்பட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
சிறுவனை காப்பாற்றிய ஹிருஷிகேஷ் மானேவின் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். “இந்த போலீஸ் தான் உண்மையான ஹீரோ", “துணிந்த இதயத்திற்கு வணக்கம்” என்பது போன்ற பல்வேறு நேர்மறையான கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
#WATCH | Maharashtra: A police personnel saved a teenage boy's life by pushing him away from the railway track just seconds before an express train crossed the spot at Vitthalwadi railway station in Thane district. (23.03)
— ANI (@ANI) March 23, 2022
Video Source: Western Railway pic.twitter.com/uVQmU798Zg
வாழ்நாள் முழுவதும் அழகாக இருக்க விரும்புகிறீர்களா? இதையெல்லாம் இனிமே சாப்பிடாதீங்க46 நிமிடங்கள் முன்