சீறி வந்த ரெயில் முன் ரீல் வீடியோ எடுத்த இளைஞர்! ஒரு நொடியில் தூக்கி வீசப்பட்ட பகீர் காட்சி;
தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் அக்ஷய் ராஜ் ( 17). 12 வகுப்பு படித்து வரும் இந்த மாணவன் இணையத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர்.
இந்த நிலையில், கடந்த நாளில், ஓடும் ரெயில் அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீ வீடியோ எடுக்க முயன்று உள்ளார்.
ஆனால், வேகமாக சென்ற ரெயில் அவர் தலை மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, இரத்த வெள்ளத்தில், கிடந்த அவரை நண்பர்கள் உதவ, ரெயில்வே போலீஸ்காரர் உதவியுடன் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அகஷய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீவிர சிகிச்சையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Why pic.twitter.com/xFuG0UN2h4
— Vishal Dharm (@VishalDharm1) September 4, 2022