பேருந்து அடிக்கடி நின்று சென்றதால் ஆத்திரமடைந்த இளைஞர்! பட்டா கத்தியுடன் செய்த செயல்
தமிழகத்தில் கும்பகோணம் பகுதியில் மினி பேருந்து ஒன்று நின்று நின்று சென்றதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் ஓட்டுநர், நடத்துனர் இருவரை பட்டா கத்தியுடன் மிரட்டிய காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மினி பேருந்து ஒன்று தராசுரம் நோக்கி சென்று நிலையில், அக்கடி பழுதாகி நின்று நின்று சென்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் நடத்துநர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
குறித்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஹரி என்பது தெரியவந்துள்ளது.
குறித்த காட்சியானது பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொளுத்தும் வெயிலை சமாளிக்க ஆட்டோ ஓட்டுநர் செய்த காரியம்! வைரலாகும் காட்சி