கொளுத்தும் வெயிலை சமாளிக்க ஆட்டோ ஓட்டுநர் செய்த காரியம்! வைரலாகும் காட்சி
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் செய்துள்ள காரியம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்
சேலம் மாவட்டம் குரங்குசாவடி அடுத்துள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 72 வயதான சுப்பிரமணி ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது ஆட்டோவின் கூரையில் சோளத் தட்டு மற்றும் வைக்கோல் கட்டி அதன் மீது குளிர்ந்த தண்ணீரை தெளித்து, வலம் வருகிறார்.
அதேபோல் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் தாகத்தை தீர்க்கும் விதமாக சிறிய தண்ணீர் டேங்க் மற்றும் ஆட்டோவின் ஒரு பக்கத்தில் சிறிய டேப் அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

அழகைக் கெடுக்கும் படர் தாமரையினால் அவதியா? இதை மட்டும் செய்தாலே போதும்
எதனால் இந்த ஏற்பாடு?
இதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், ஆட்டோ ஓட்டு போடுவதற்கு முன்பு, 40 ஆண்டுகள் டெய்லராக பணியாற்றி வந்தேன். ரெடிமேடு கடைகள் அதிகம் வரத்தொடங்கியதால் தையல் தொழில் பாதித்தது.
அதன்பின் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறேன். எனது ஆட்டோவில் மக்களைக் கவரும் விதமாக பல்வேறு வசதிகளை செய்துள்ளேன்.
தற்போது சுட்டெரித்து வரும் கோடை வெயிலை சமாளிக்க தனது ஆட்டோ கூரை மீது வைக்கோல் கட்டி , தண்ணீருடன் பயணித்து வருவதாக கூறும் சுப்பிரமணி, போக்குவரத்து காவலர்கள், பயணிகள் உள்ளிட்ட காண்போர் அனைவரும் பாராட்டுவதாகவும், அவ்வாறு பாராட்டும் போது தனக்கு வயது குறைந்ததை போன்ற மன நிறைவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும் குழந்தைகளைக் கவர்வதற்காக ஆட்டோவில் வண்ண வண்ண லைட்டுகளை அமைத்து, குழந்தைகளை கவர்ந்து பள்ளிக்கு அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் தனக்கு முதியோர் உதவித் தொகை கிடைத்தால் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறுகிறார். ஆட்டோ ஓட்டுனரின் இந்த செயலை நிரைய மக்கள் பாராட்டி வருகின்றனர்