Personality Test: உங்களது இதய ரேகை எந்த டைப்னு பாருங்க... சுவாரஸ்யமான குணத்தை இதுதானாம்
நமது கைகளில் காணப்படும் இதய ரேகையை வைத்து ஒவ்வொருவரிடம் வாழ்க்கையின் சுவாரசித்யத்தை தெரிந்து கொள்ளலாம்ஃ
கை ரேகை
நமது கைகளில் காணப்படும் கோடுகளையே ரேகை என்று அழைப்பார்கள். இவை ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
குறித்த ரேகைகள் வாழ்க்கையில் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதிலும் நமது உள்ளங்கையில் உள்ள இதய ரேகை உணர்ச்சி, குணங்கள், இயல்பு, வாழ்க்கை மற்றும் தொழில் குறித்த பல விஷயங்களை தெரியப்படுத்தும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால், ஒருவரது உணர்ச்சிகள் மற்றும் உறவுகளை கையாளும் விதத்தை இந்த இதய ரேகை தெரியப்படுத்தும்.
நமது சுண்டு விரலுக்கு கீழே இருக்கும் கிடைமட்டமான ரேகை தான் இதய ரேகை ஆகும். மூன்று விதங்களில் இதய ரேகை காணப்படும் நிலையில், ஒவ்வொருவரின் குணநலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Optical Illusion: இந்த படத்தில் முதலில் எதை கவனித்தீர்கள்.. வாழ்க்கையில் எப்படி இருப்பீங்க தெரியுமா?
இரண்டு கைகளிலும் நேராக இருந்தால்
உங்களது இரண்டு கைகளை சேர்த்து வைத்துப் பார்த்தால் இதய ரேகை ஒரே மாதிரியாக படகு போன்று காண்பபட்டால், நீங்கள் இணக்கமானவர் மற்றும் சமநிலையான இயல்பைக் கொண்டராக இருப்பீர்கள்.
உணர்ச்சிரீதியாக நிலையானவராக இருப்பதுடன், கனிவு, இரக்கம், நம்பிக்கை கொண்டவராகவும், சமாதானம் செய்பவராகவும் இருப்பீர்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் இவற்றில் நிலையான நடைமுறை அணுகுமுறையைக் கொண்ட நீங்கள் சவால்களையும் நேர்த்தியாக சமாளிப்பீர்கள்.
உங்களை யாரும் எளிதில் திசைதிருப்ப முடியாதாம். உறவுகளை சிறப்பாக பேணும் நீங்கள் உணர்ச்சி ரீதியாகவும் அமைதியாகவே இருப்பீர்கள். மேலும் அர்த்தமுள்ள உறவுகளையே தேடுவீர்கள். விசுவாசமான மற்றும் நம்பகமான துணையாக இருப்பீர்கள்.
இடது கை இதய ரேகை உயரமாக இருந்தால்
இடது கையின் இதய ரேகை வலது கையை விட உயரமாக இருந்தால், நீங்கள் வலுவான உள்ளுணர்வு, படைப்பாற்றல் கொண்டவராக இருப்பீர்கள்.
சுதந்திரமாக செயல்பட விரும்புவதுடன், தன்னம்பிக்கை நிறைந்தவறாகவும், தனக்கென தனி பாதையை அமைத்து வாழ்க்கையினை வாழ விரும்புவீர்கள்.
சுறுசுறுப்பான மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டிருப்பீர்கள். சிலருடன் மட்டுமே வலுவான பிணைப்பினை உருவாக்குவீர்கள்.
லட்சியவாதியாக இருக்கும் நீங்கள் ரிஸ்க் எடுப்பதற்கு பயன்பட மாட்டீர்கள், புதிய அனுபவத்தை தேடுபவராகவும், கதை கூறுவதில் வல்லவராகவும் இருப்பீர்கள்.
வெளிப்படையாக பேசும் நீங்கள், உங்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்கு விசுவாசமாகவும், சுதந்திரமாக இருப்பதுடன், மற்றவர்களை சார்ந்திருக்க விரும்புவதில்லை.
வலது கை இதய ரேகை உயரமாக இருந்தால்
வலது கை இதய ரேகை உயரமாக இருந்தால், நீங்கள் யதார்த்தமானவராகவும், வாழ்க்கையின் யதார்த்தத்தினை புரிந்து நடந்து கொள்பவராகவும், உணர்ச்சி ரீதியாக முடிவை எடுக்காமல், சூழ்நிலையை புரிந்து முடிவு எடுப்பவராகவும் இருப்பீர்கள்.
மிகவும் நம்பிக்கையானவராகவும், பொறுப்புணர்வைக் கொண்டவராகவும், தெளிவான இலக்கை நிர்ணயித்து அதனை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள்.
ரிஸ்க் எடுப்பதற்கு தயக்கம் கொள்ளும் நீங்கள், நிதானமாக இருப்பதுடன், உணர்வுகளை ரகசியமாக வைத்திருப்பீர்கள்.
உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவது சவாலாக இருப்பதுடன், அன்பானவர்களிடம் ஆழ்ந்த அக்கறையுடனும், விசுவாசத்துடனும் இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |