பிஸ்தாவை ஏன் தினமும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்?
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள பிஸ்தாவை உணவில் சேர்ப்பதன் மூலம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், பல நோய்களிலிருந்து பாதுகாப்பாகவும் இருக்க முடியும்.
இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், தியாமின், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
பிஸ்தாவின் நன்மைகள்
இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கின்றது. இது தாவர ஸ்டெரால்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளதால், தமனிகள் மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாவதையும் தடுக்கின்றது.
இன்றைய காலத்தில் மொபைல் மற்றும் கம்யூட்டர் திரைகளை அதிகமாக பார்த்து வருபவர்களின் கண்களுக்கு ஆரோக்கியத்தினை அளிக்கின்றது. கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவதுடன், வீக்கத்தைக் குறைக்கவும், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பாதாம் அற்புதமாக உதவி செய்கின்றது, பசியைக் கட்டுப்படுத்துவதுடன், போதுமான ஆற்றலையும் கொடுப்பதால் அதிக உணவுகளை நீங்கள் தவிர்த்து விடுவீர்கள்.
ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுவதுடன், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளதால், இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்கின்றது. பிஸ்தாவை உணவில் சேர்த்துக்கொள்வது பசியைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவை குறைக்கவும், நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைத் தடுக்கவும் உதவும்.
குடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், செரிமான பிரச்சினை வருவதையும் தடுக்கின்றது. ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தவும், இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |