சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? ஒரு நிமிடம் இதை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக சக்கரை நோயாளர்களுக்கு குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிட முடியாது.
ஆம், சக்கரை நோயாளர்கள் பிஸ்தா, பாதாம் போன்ற விலையுயர் தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது ஆபத்து என சில வதந்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் இது உண்மையல்ல, இவை உணவில் சேர்த்துக் கொள்வதினால் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் சக்கரை நோயாளர்கள் மற்றும் இதயம் பிரச்சினையுள்ளவர்கள் பிஸ்தாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என்பது குறித்து தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
பிஸ்தாவில் இருக்கும் சாதகமான அம்சங்கள்
பொதுவாக பிஸ்தாவில் அதிகமான கொழுப்புசத்து புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது
இதை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு அதிகரிக்ககூடும் என சிலர் கூறுவார்கள். ஆனால் இது உடலிலுள்ள இரத்தத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
உடல் அதிக சோர்வு ஏற்படும் போது அல்லது பசி ஏற்படாது இருக்கும் போது பிஸ்தா தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை சக்கரை நோயாளர்களும் தினமும் எடுத்துக் கொள்வது சிறந்தது.
ஆனால் உடலிலுள்ள சக்கரையின் அளவு அதிகம் உள்ள போது உப்பு சேர்த்த பிஸ்தா சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சக்கரையின் அளவை கட்டுபடுத்த முடியாமல் இருப்பவர்கள் தினமும் 50 கிராம் பிஸ்தா எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதயம் பலவீனமானமுள்ளவர்கள் பிஸ்தா எடுத்துக் கொள்வது நல்லது, ஏனெனின் இது கெட்ட கொழுப்பை கரைத்து உடலிலுள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.
அழற்சி பிரச்சினையுள்ளவர்கள் பிஸ்தா எடுத்து கொள்வதால் நிரந்தர தீர்வை பெறமுடியும்.
ஏனெனில் பிஸ்தாவில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நிரந்தர தீர்வளிக்கிறது.