இந்த குணம் கொண்ட பெண்கள் ஆண்களின் நிம்மதியை பறித்துவிவார்கள்... எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கொள்ளைகள் அனைத்தையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்ட நூலே சாணக்கிய நீதியாகும், வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் கடக்க வேண்டி அனைத்து சூழ்நிலைகள் தொடர்பிலும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில குணங்களை கொண்ட பெண்களை திருமணம் செய்வது ஆண்களின் திருமண வாழ்க்கையை நிம்மதியற்றதாக மாற்றிவிடும் என அறியப்படுகின்றது.
அப்படி ஆண்களின் திருமண வாழ்ககையை துரதிஷ்டம் நிறைந்ததாக மாற்றும் பெண்களின் தீய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்கலாம்.
தீய குணங்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்களிடம் அதிகமாக பொய் சொல்லும் பழக்கம் இருப்பதும், மற்றவர்களை ஏமாற்றும் குணம் இருப்பதும் அவர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி அவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களின் மகிழ்ச்சியையும் வேரோடு அழித்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் எந்த பெண்ணிடம் பெரியவர்களை அவமதிக்கும் பழக்கம் இருக்கின்றதோ, அவர்களால் அவர்களின் கணவன் பாரிய அவமானங்களை சந்திக்கநேரிடும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
பெரியவர்களை மதிக்காத பெண்கள் நிச்சயம் தங்களின் கணவனுக்கும் மதிப்பளிக்க மாட்டார்கள். இவர்களால் வீட்டில் அமைதியும் மகிழ்சியும் இல்லாமல் போய் சண்டைகளும் கெட்ட வார்த்தைகளும் அதிமாகிவிடும். இந்த குணம் கொண்ட பெண்ணை திருமணம் செய்யும் ஆண் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது.
முன்கோபம் அதிகம் கொண்ட பெண்கள் வாழ்வில் பெரும்பாலான சமயங்களில் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். அவர்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இந்த குணம் பல வழிகளிலும் துரதிஷ்டத்தையே கொடுக்கும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
அளவுக்கு மீறிய கோபம் கொண்ட பெண்கள் தங்களையும் சரி மற்றவர்களையும் சரி ஒருபோதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் அதிக பேராசை கொண்ட பெண்களின் திருமண வாழ்க்கை மகிழ்சியாக இருக்காது. இவர்கள் கணவனின் மகிழ்சியையும் சீர்குழைத்து விடுவார்கள்.
குறிப்பாக பணத்தின் மீது பேராசை குணம் கொண்ட பெண்கள் மொத்த குடும்பத்துக்கும் தீங்கு விளைவிப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். பெண்களிடம் இந்த குணங்கள் இருந்தால், முதலில் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் காரணம் அது அவர்களுக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் அதிக பாதிப்புகைளை ஏற்படுத்தும்.
K4ZINNC
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |