Chanakya Niti: இளமையிலேயே வயதானவர்கள் போல் உணரச் செய்யும் ஆபத்தான பழக்கங்கள்- உங்ககிட்ட இருக்கா?
பொதுவாக முதுமை என்பது நம்மாள் ஏற்றுக் கொள்ள முடியாத கசப்பான உண்மையாகும்.
மீண்டும் வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை- ஐஸ்வர்யா ராய் அம்மாவை இப்படி தான் நடத்துவார்- அபிஷேக் பச்சன் Open Talk
இதனை பெரும்பாலானவர்கள் மறைக்கவும் மற்றும் மறக்கவும் விரும்புகிறார்கள்.
முன்னைய காலங்களில் வயதானவர்கள் மட்டும் தான் முதுமையடைந்தவர்கள் போல் காணப்படுவார்கள்.
ஆனால் தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறையால்
இளைஞர்களே முதுமையடைந்தவர்கள் போல் காணப்படுகிறார்கள்.
உதாரணமாக, முன்கூட்டிய முடி நரைத்தல், உடல் பலவீனம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவை வயதான அறிகுறிகளை இளம் வயதிலேயே இருக்கும்.
இது போன்ற பிரச்சினைகள் குறிப்பிட்ட சில பழக்கங்கள் காரணமாக தான் ஏற்படுகின்றதாக சாணக்கியர் கூறுகிறார். அப்படியான பழக்கங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இளமையில் முதுமையடைய வைக்கும் பழக்கங்கள்
1. ஒருவர் எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைபிடிக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்காமல், நேரத்துக்குத் தூங்காமல் இருந்தால் எதிர்மறையான தாக்கத்தை அனுபவிப்பார்கள்.
2. பயணக் களைப்பு மற்றும் ஒழுங்கற்ற செயல்பாடுகளாலும் இளமையில் முதுமை ஏற்படும். கணவனால் உடல் சுகம் கிடைக்காத பெண்களும் விரைவில் முதுமை அடைவார்கள் என சாணக்கியர் கூறுகிறார்.
3. குதிரை கட்டி வளர்த்தால் அது சீக்கிரம் முதுமையடையும் என்பார்கள். ஏனெனின் குதிரையின் அடிப்படை செயல்பாடு ஓடுவது இதனை செய்ய விடாமல் கட்டி வைத்தால் இளமை மறைய ஆரம்பிக்கும். அதே போல் தான் உடல் வலிமை அனைவருக்கும் அவசியம். இதனை கட்டிப் போட்டால் சீக்கிரம் பலவீனமடைவார்கள்.
4. காலை முதல் மாலை வரை தூங்குபவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் இருக்காது. இவர்கள் சீக்கிரம் வயதானவர்கள் போல் காட்சிக் கொடுப்பார்கள். வாழ்க்கையில் முன்னேற்றமும் இருக்காது. இந்த பழக்கம் இருந்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர்களின் ஆயுள் பாதிக்கப்படும் என சாணக்கியர் கூறுகிறார்.
5. தேவைக்கு அதிகமாக சாப்பிட்டாலும் அவர்கள் ஏழையாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் உங்கள் வயது எப்போதும் 18 தான். அதிகமாக சாப்பிடுபவர்கள் நீண்ட ஆயுளுடனும் இருக்க மாட்டார்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |