மீண்டும் வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை- ஐஸ்வர்யா ராய் அம்மாவை இப்படி தான் நடத்துவார்- அபிஷேக் பச்சன் Open Talk

DHUSHI
Report this article
ஐஸ்வர்யா ராய் இப்படி தான் என் அம்மாவுடன் நடந்து கொள்வார் என அபிஷேக் பச்சன் பேசிய பழைய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார். இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர்.
தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை.
அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜஸ்வர்யா ராய் நடித்திருந்தார் .
விவாகரத்து சர்ச்சை
இந்த நிலையில் சமீபக் காலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுகிறார்கள். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என பலரும் பேசி வருகிறார்கள்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் குடும்பமாகவும் ஐஸ்வர்யா ராய் மகளுடனும் சென்றிருந்தனர்.
இதனை பார்த்த மீடியாக்கள் இருவரும் தனித்து வாழ்கிறார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அம்மாவுடன் இப்படி தான் இருப்பார்..
மேலும் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் அம்மாவுடன் எப்படி நடந்து கொள்வார் என அபிஷேக் பச்சன் பகிர்ந்த பழைய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில், “ ஒரு பெண் கணவன் வீட்டிற்குள் நுழையும் போது அவருக்கு வெளிப்படையாக பேசுவதற்கு இடமில்லாமல் இருப்பதாக உணருவார்.
அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூடிய இடத்தில் இருக்கும் ஒரே நபர் அவருடைய மாமியார் தான் என்று நான் நினைக்கிறேன். எனது தாயும், மனைவியும் நன்றாக பேசிக் கொள்வதால், அந்த பிரச்சனை இல்லை” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |