டீனேஜ் வயசுல தூக்கம் வரலையா? அப்போ இந்த நோய்கள் வரும்- ஜாக்கிரதை
தற்போது இருக்கும் அவசர வாழ்க்கையில் உணவு பழக்கங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நிம்மதியான தூக்கம் அவசியம்.
அதிலும் குறிப்பாக இளம் வயதில் இருப்பவர்கள் 8 அல்லது 6 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது உடலானது உடல் ரீதியான, உணர்வு ரீதியான மற்றும் மனரீதியான பல்வேறு மாற்றங்களை அனுபவிக்கும்.
அப்போது அதற்கு சரியான ஓய்வு கொடுக்காமல் இருந்தால் கல்வி ரீதியான அழுத்தங்கள், ஸ்கிரீன் நேரம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
இளம் வயதில் இருப்பவர்கள் ஒழுங்கற்ற தூக்க முறை அல்லது தூக்கமின்மை பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதற்கு முறையான தூக்கமின்மையே காரணமாகும். இந்த பழக்கம் உடலின் உட்புற கடிகாரம் சீரமைக்கப்பட்டு, மனநிலை, மூளையின் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு வாழ முடியாத நிலையை ஏற்படுத்தும்.
அந்த வகையில், இளம் வயதில் இருப்பவர்கள் முறையாக தூங்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தூங்காவிட்டால் என்ன நடக்கும்?
1. நிம்மதியான தூக்கம் இளம் வயதில் உள்ளவர்களின் ஞாபகசக்தி, கவனிப்புத்திறன் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் ஆகியவற்றில் தாக்கம் செலுத்தும். அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என நினைத்தால் போதுமான அளவு ஓய்வு அவசியம்.
2. பொதுவாக இளம் வயதில் உள்ளவர்களின் உடல் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த உறக்கம் அதற்கெல்லாம் ஓய்வு கொடுக்கும். தொடர்ச்சியாக தூக்க அட்டவணையை பின்பற்றினால் மட்டுமே இளம் வயதினருக்கு வளர்ச்சிகள் சரியாக நடக்கும். ஆரோக்கியமான எலும்பு தசைகள் மற்றுமு் திசுக்கள் வளர வேண்டும் என்றால் தூக்கம் அவசியம்.
3. போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டால் மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் சில சமயங்களில் பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகிய குணப்படுத்த முடியாத நோய்கள் வரலாம். சரியான நேரத்திற்கு தூங்கினால் மனதில் இருக்கும் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
4. நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி தொற்றுகளுக்கு எதிராக சண்டையிடுவதற்கு உடலை எப்போதும் தயார் நிலையில் வைக்க வேண்டும். இளம் வயதினருக்கு பருவ கால மாற்றங்களின் போது தொற்றுக்கள் ஏற்படலாம். இவற்றை சரிச் செய்ய போதுமான அளவு தூக்கம் அவசியம். இதுவே உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
5. சீரற்ற தூக்கமானது பசி மற்றும் ஹார்மோன்கள் சமநிலையை பாதித்து, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. நேரத்திற்கு தூங்கினால் உங்களின் எடை எப்போதும் சரியான எடையில் இருக்கும்.
6. இளம் வயதில் இருப்பவர்களுக்கு முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சினைகள் வருவது வழக்கம். தரமான தூக்கமானது சருமத்தை மீட்டெடுத்து, வீக்கம் ஏற்படுவதை குறைக்கிறது. இதன் மூலமாக முகப்பரு வருவது குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |