டைட்டில் வின்னர் யார் என்று பார்ப்பதற்காக சாப்பிடாமல் இருந்தேன்! கண்ணீர் மல்க விக்ரமனை கட்டி பிடித்து கதறிய இளைஞர்..
பிக் பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக இருந்து விக்ரமனுக்காக சாப்பிடாமல் இருந்து மயங்கி விழுந்த இளைஞனின் வீடியோ பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஷோக்களில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த ஷோவில் முக்கிய போட்டியாளராக இருந்து மக்கள் மனதில் விக்ரமன் மற்றும் அசீம் இடம்பிடித்துள்ளார்கள்.
இவர்களில் அசீம் தான் ஏக மனதாக மக்களின் மத்தியில் டைட்டில் வின்னராக தெரிவுச் செய்யப்பட்டு அதற்கான பட்டம் மற்றும் பணம் இவை இரண்டும் கொடுக்கப்பட்டது.
அந்த பணத்தில் பாதியை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானம் கொடுத்தாகவும் அவர் வீடியோ ஒன்றில் தெரியப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களில் மிகவும் நல்ல விதமாக தங்களை மக்களுக்கு காட்ட வேண்டும் என்ற முயற்சியில் ரக்சிதா, மைனா, கதிரவன், ஆயிஷா, விக்ரமன் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் இருந்தார்கள்.
அதேவேளை மக்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை அந்த தினத்தில் அந்த இடத்தில் என்ன தோன்றுகிறோ அதை செய்யும் போட்டியாளராக அசீம், மணிகண்டன், ஏடிகே, ஜிபி முத்து, தனலெட்சுமி, மகேஸ்வரி உள்ளிட்ட போட்டியாளர்கள் இருந்தார்கள்.
அண்ணா - தங்கையாக வலம் வரும் முக்கிய போட்டியாளர்கள்
ஆனால் இதில் தனலெட்சுமி மற்றும் அசிம் இருவருக்கும் எப்போதும் பிக் பாஸ் வீட்டில் சேட்டாகாது என நாம் அனைவரும் சமிபத்தினங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடியதாய் இருந்தது.
இந்நிலையில் வெளியில் வந்ததும் பிக் பாஸ் வீட்டில் அடித்துக் கொண்ட பிரபலங்கள் வெளியில் வந்ததும் இணைந்துக் கொண்டு அசீமை தாக்கிய வார்த்தைகளால் பேட்டிக் கொடுப்பதும், அதற்கு பதில் கொடுப்பதும், என ஒரு பக்கம் செல்கையில், இன்னொரு பக்கம் விக்ரமனுக்கு சார்பாகவும் சில சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.
இதனை கமல்ஹாசன் ஆதரவளிக்கும் வகையில் பிக் பாஸ் மேடையிலும் சில வேளைகளை செய்திருப்பார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் கமல் அவர்களை விக்ரமன் நேரில் சென்று நலம் விசாரித்ததாக விக்ரமன் அவர்கள் அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
விக்ரமனின் தீவிர பக்தன்
இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் நடாத்திய ஷோவில் பிக் பாஸின் தீவிர பக்தன் ஒருவர் கலந்துக் கொண்டிருந்தார். அவர் விக்ரமன் சார்பாக இருந்தவர் விக்ரமனின் வெற்றியை பார்ப்பதற்காக ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் பார்த்துக் கொண்ருந்தாராம்.
இதனால் தலைச்சுற்று ஏற்பட்டு பிக் பாஸ் சீசன் 6 க்கான டைட்டில் வின்னர் யார் என்று கூறும் நிலையில் மருத்துவமனைக்குச் சென்றுக் கொண்டிருந்தாகவும் அவர் கூறியிருந்தார். அவர் விக்ரமனை தன்னுடை தாய் தந்தைக்கு நிகராக பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் என்பது ஒரு ஷோ மட்டும் அதற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை எனவும் தங்களின் ஆதரவுகளையும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
Those tears in his eyes speaks thousand words ???? this is true love ??❤️❤️ #Vikraman#BiggBossTamil6
— Kapes (@kapespapa) February 7, 2023
#AzeemAbuser#AramVellumLegalAid#AramVellum #totalwinnervikraman pic.twitter.com/d21eqa4Ew2