வெளிநாட்டில் இருந்து ஆசையாக வந்த மகன்! ஒருசில மணிநேரங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த மகன் கொரோனா தொற்றால் பலியானதால் பெற்றோர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலம் சாமிநாதன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ். ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி.
இவரது ஒரே மகன் மணிஷ் (25) சுவீடன் நாட்டில் பி.எச்.டி படித்து முடித்துவிட்டு கடந்த 9-ந் தேதி சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென மணிஷ்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு இடமில்லை என கூறவே, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனால் மணிஷை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் மணிஷின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர், சமீபத்தில் தான் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
எனவே மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது, எனினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.