மிக்சர் சாப்பிடுக்கொண்டிருந்த சிறுமிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்- கதறிய குடும்பத்தினர்கள்!
மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திரிகன்னபுரத்தை சேர்ந்தவர் ராகேஷ்.. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு 6 வயதில் நிவேதிதா என்கிற மகள் உள்ளார்.
நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி மிக்ஸர் சாப்பிடும் போது அதிலிருந்த கடலை மூச்சுக் குழாயில் சிக்கி மூச்சுத்திணறி துடித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், இது குறித்து ராஜேஷ் கூறுகையில், நிவேதிதா மூச்சு விட சிரமப்பட்ட போது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். செல்லும் வழியில் கண் திறந்து தனது தாயை பார்த்தார்.
அதன் பின்னர் அவளுடைய தாய் அவளிடம் சாக்கலேட் வாங்குவதாக சொன்னார். அப்போது நிவேதிதா தலையாட்டினாள்.
சிறிது நேரத்தில் அவள் கண்ணை மூடி சரிந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதனால், குழந்தைகள், சிறுவர்களின் உணவு சாப்பிடும்பொழுது பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனுடம், கவனத்துடனும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்