ஆர்டரை மறுத்த உணவகம்... ஏறி குதித்து இளம்பெண் செய்த சம்பவம்; வைரல் வீடியோ!
உணவகம் ஒன்றில் இளம்பெண் கொடுத்த ஆர்டரை வாங்க மறுத்ததை அடுத்து இளம்பெண் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் மெக்டொனால்ட் உணவகம் மிகவும் புகழ் பெற்றது. பலரும் இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்கு ஆசைப்படுவார்கள்.
அதற்கு காரணம் இந்த உணவகத்தில் ஆர்டர் செய்தால் சுவையுடன் தரமான உணவு கிடைக்கும் என்பதால் பலர் இந்த உணவகத்திற்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இளம்பெண் ஒருவர் அந்த உணவகத்தில் சாப்பிட ஆசைப்பட்டு, அதற்காக அந்த உணவகத்தை நாடிச் சென்று உள்ளார்.
அங்கு மெக்டோனால்ட் உணவு நிறுவனத்தின் நிர்வாகிகள் இளம்பெண் கொடுத்த ஆர்டரை வாங்க மறுத்துள்ளனர்.
உணவகத்தின் பணி நேரம் முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் அங்கிருந்த ஜன்னல் வழியாக ஏறி உணவகத்தின் சமையலறைக்குள் சென்றுள்ளார்.
பின் தனக்கான உணவை அந்த பெண் சமைக்க ஆரம்பித்துள்ளார். இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அந்த பெண்ணை தனது ஆர்டரை சமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து கூறினர்.